18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட 7தமிழர்களை விடுதலை செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட 7தமிழர்களை விடுதலை செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan February 20, 2020, 2:51 pm

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை மீண்டும் கூடி  தீர்மானம் நிறைவேற்ற கோரியும், அமைச்சரவை தீர்மானத்தை அமல்படுத்த ஆளுநருக்கு அழுத்தம் தர வலியுறுத்தியும் மதுரை அரசு சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில ,அரசுகள் மற்றும் ஆளுநருக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும் போது மாநில அரசு ஆளுநருக்கு அழுத்தம் தரவேண்டும் எனவும் பல ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்கள் கூறினார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!