17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் விழா

நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் விழா

எழுதியவர்: mohan February 20, 2020, 11:46 am

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் நிலக்கோட்டை கனரா வங்கி கிளை மேலாளர் காந்திராஜன் தலைமையில் இலவசமாக 50 மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நூத்துலாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சங்கிலி பாண்டியன் வரவேற்றுப் பேசினார். விழாவில் பள்ளியில் பயிலும் அனைத்து ஏழை, எளிய ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக 50 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரதிமாலா, வங்கி துணை மேலாளர் ராகுல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!