18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலம் முழுவதும் இருபுறமும் மணல் குவியல். மரண பயத்தில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்

பாலம் முழுவதும் இருபுறமும் மணல் குவியல். மரண பயத்தில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்

எழுதியவர்: mohan February 20, 2020, 10:53 am

மதுரை மாவட்டம் மதுரா கோட்ஸ் மேம்பாலம் முழுவதும் மணல் குவியல் ஆகவே உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது செல்லவே அச்சப்படுகிறார்கள். எப்பொழுது மணலில் சிக்கி கீழே விழுந்துவிடுவோம். பின்னால் வரும் வாகனங்கள் ஏற்றி விடும் என்ற அச்சத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .குறுகிய பாலம் என்பதால் பாலம் சாலை மிகவும் சிதலமடைந்து உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இருபுறமும் உள்ள மணல்களை அகற்றி இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிர்களை உத்தரவாதம் தர வேண்டுமென்பது இருசக்கர வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!