17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பூர் அருகே பயங்கர விபத்து:விபத்தில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழப்பு..

திருப்பூர் அருகே பயங்கர விபத்து:விபத்தில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழப்பு..

எழுதியவர்: Askar February 20, 2020, 9:50 am

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலை, திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்றதாக கூறப்படும் டைல்ஸ் கற்கள் ஏற்றிய கண்டெய்னர் லாரியும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஓட்டுநர் உட்பட திருப்பூர் விபத்தில் ஐந்து பெண்கள் உட்பட 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 23 பேர் காயமடைந்துள்ளனர். திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியானது நடந்து வருகிறது. விபத்து குறித்த கேரளா அரசுக்கு தெரியப் படுத்தப்பட்டுளது . கேரளாவில் இருந்து ஒரு குழுவை அனுப்பி அனுப்பியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உடல்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும்

தற்போது மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் காயமடைந்தவர்களுககு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் தலைமறைவாகி உள்ளதால் அது குறித்த விசாரணை செய்யப்பட்டு வருகிறது விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!