17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பசும்பொன் தேவருக்கு பாலூட்டியது ஆயிஷா எனும் முஸ்லிம் தாய் என்பதால், நாங்கள் நன்றி மறக்க மாட்டோம்..

பசும்பொன் தேவருக்கு பாலூட்டியது ஆயிஷா எனும் முஸ்லிம் தாய் என்பதால், நாங்கள் நன்றி மறக்க மாட்டோம்..

எழுதியவர்: Askar February 19, 2020, 1:28 am

மதத்தை வைத்து அரசியல் செய்வது கேவலமானது!வண்ணாரப்பேட்டை போராட்ட களத்தில் கருணாஸ் MLA கண்டனம்!

வண்ணாரப்பேட்டை குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்ட களத்துக்குக்கு முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் MLA, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் வருகை தந்தனர்.

அப்பகுதி இந்துக்கள் தொடர்ந்து அங்கு பழங்கள் , குடிநீர் உள்ளிட்டவைகளை வினியோகித்தவாறு இருந்தனர்.

நேற்று இனிகோ உள்ளிட்ட கிருஸ்துவ மக்கள் திரண்டு வந்து ஆதரவளித்தனர்.

இன்று மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA மற்றும் கருணாஸ் MLA தன் புலிப் படையினருடன் வந்தார்.

அவர் பழனி முருகன் கோயிலுக்கு மாலை போட்ட நிலையில் காவி வேட்டியுடன் பத்தியத்துடன் வந்திருந்தார்.

அங்கு பேசிய கருணாஸ், தான் ஒரு இந்து என்றும், என் மனைவி ஒரு கிரிஸ்துவர் என்றும், தேவர் ஐயா வழியில் எல்லோருடனும் இணங்கி வாழ்வதாகவும், மதத்தை வைத்து பிரிவினை அரசியல் செய்வது கேவலமான து என்றும் சாடினார்.

சென்னையில் என் தம்பி தமிமுன் அன்சாரியுடன் சேர்ந்து முதன் முதலாக இச்சட்டங்களின் நகல் கிழிப்பு போராட்டத்தை தொடங்கி வைத்ததாகவும், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்ததையும் எடுத்து கூறினார்.

பசும்பொன் தேவருக்கு பாலூட்டியது ஆயிஷா எனும் முஸ்லிம் தாய் என்பதால், நாங்கள் நன்றி மறக்க மாட்டோம் என்று கூற பலத்த கைத்தட்டல் கிளம்பியது.

எல்லா மக்களும் இந்த மண்ணின் உறவுகள் என்றவர், யாரையும் பிரித்துப் பார்க்க கூடாது என்றும், உங்களின் போராட்டத்திற்கு முக்குலத்தோர் புலிப் படை துணை நிற்கும் என்றும் கூறினார்.

அமைதியாக இதே போல் போராட்டத்தை கட்டுக்கோப்போடு நடத்த வேண்டும் என்றும் அறிவுரை கூறி விடைப் பெற்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!