17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடையை மீறி தலைமை செயலக முற்றுகை போராட்டம்: இஸ்லாமிய கூட்டமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு..

தடையை மீறி தலைமை செயலக முற்றுகை போராட்டம்: இஸ்லாமிய கூட்டமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு..

எழுதியவர்: Askar February 19, 2020, 12:11 am

தடையை மீறி தலைமை செயலக முற்றுகை போராட்டம்: இஸ்லாமிய கூட்டமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு..

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 4 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திவரும் இந்த போராட்டத்தை முறியடிக்க காவல்துறை மற்றும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் செய்துள்ள போதிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. ஆனால் இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமைச் செயலகத்தில் மார்ச் 11ஆம் தேதி வரை போராட்டம் நடத்த சென்னை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திட்டமிட்டபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து நாளை தலைமைச் செயலகத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!