17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகர் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகர் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி

எழுதியவர்: mohan February 18, 2020, 6:53 pm

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மாநகர் காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவின் பேரில் நேரடி மேற்பார்வை சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வருவார்கள்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கேனில் மண்ணெண்னெய் கொண்டு தன் மேல் ஊற்றி தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரங்கேறி வருகிறது.மேலும் வெவ்வேறு சங்க அமைப்பினர், கட்சியினர் அடிக்கடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வருகின்றனர்.

இது போன்ற நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி நேரடி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.இந்த சிசிடிவி கேமராவின் மூலம் மதுரை மாநகர ஆணையாளர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆணையாளர் நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த சிசிடிவி கேமரா பொருத்தப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!