17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கிகள் உதவியுடன் கடன் பெற்று தலைமறைவானர்கள் கைது

மகளிர் குழுக்களுக்கு கடன் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கிகள் உதவியுடன் கடன் பெற்று தலைமறைவானர்கள் கைது

எழுதியவர்: mohan February 18, 2020, 6:38 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கோட்டை தெருவைச் சார்ந்த முத்தையா என்பவரது மகளும் தங்கச் சாமி என்பவரது மனைவியுமான பாப்பாத்தி (எ) வசந்தி, (ஆதார் எண்:800578408925)மற்றும் அவரது மகன்கள் மனிஷா, திரிஷா ஆகியோர் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தனியார் வங்கிகளில் தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி வறுமையில் உள்ள பொதுமக்களை (குறிப்பாக மலைவாழ் மக்கள், பட்டியல் இனத்தவர்கள் ) குறி வைத்து அவர்களது சான்றாவணங்களை பெற்று தனியார் வங்கிகளில் , வங்கி அதிகாரிகளின் துணை கொண்டு மகளிர் நுண்கடனாக சுமார் 239 நபர்களுக்கு சிபாரிசின் பெயரில்ரூ 61,18000/- வரை பெற்று மக்களுக்கு 2000/- மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தாமே வங்கியில் கட்டிக் கொள்வதாக உத்திரவாதம் அளித்துள்ளார்.

பணத்தை கட்டுவதாக கூறிய வசந்தி வங்களில் முறையாக பணம் செலுத்தவில்லை. மேலும் தமது மகள்களுக்கு திருமணம் என்று கூறி அண்டை வீட்டார்களிடம் சுமார் 25 பவுனுக்கும் மேலாக தங்கநகைகளை பெற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். பித்தளை பாத்திரங்களை பொதுமக்களிடம் அடகாகப் பெற்றும் அவர்அடகு வைத்த தொகையை அவரே வைத்துக் கொண்டும் குறப்பிட்ட காலத்தில் திருப்பித் தருவதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளார் .பொது மக்களிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்த வசந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் தனியார்வங்கி ஊழியர்கள் உதவியுடன் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேனி மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்கரை போலீசார் தலைமறைவாக இருந்த பாப்பாத்தி (எ) வசந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாப்பாத்தி கைதான சம்பவம் பொதுமக்களிம் காட்டுத் தீயாக பரவியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தென்கரை காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு காணப்பட்டது.

இவண்.சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!