17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் பாதையை மறித்து கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்றக்கோரி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் பாதையை மறித்து கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்றக்கோரி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எழுதியவர்: mohan February 18, 2020, 6:02 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .இந்நிலையில் தனிநபர் ஒருவர் பாதையை மறித்து தனக்கு சொந்தம் எனக் கூறி பாதையை மறித்து தடுப்புச் சுவரை கட்டியுள்ளார். இதனால் அந்த தெருக்களில் வசிக்கும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த தடுப்பு சுவரை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தடுப்பு சுவரை அகற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த நிலையில் தடுப்பு சுவரை அகற்றவும் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கீரிபட்டி கிராம மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!