18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2020, 5:54 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் 17/02/2020 அன்று காலை 10.00 மணியளவில்  நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr.A.R நாதிராபானு கமால் பெண்கள் பாதுகாப்பாக வாழ விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் A.ஜீவரத்தினம் போலிஸ் இன்ஸ்பெக்டர் AWPS, இராமநாதபுரம்  பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு “காவலன் ஆப்” என்ற செயலியை உருவாக்கியது பற்றியும், பெண்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார். பெண்கள் தன்னை பாதுகாத்து கொள்ள கல்வி, ஒழுக்கங்களில் சிறந்து விளங்குவதுடன் யோகா போன்ற மனவளக் கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக IQAC ஒருங்கிணைப்பாளர் அன்வர் ரொ சாஹின்  நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!