17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan February 18, 2020, 12:05 pm

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தமிழ் புலிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ,தமிழ்முருகன்தலைமை வகித்தார்.தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் சேகர் , விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்முகமது யாசின், பெரியார் பேரவைமாவட்ட தலைவர்நாகேஸ்வரன்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கலையரசன்,ஆதித்தமிழர் பேரவைமாவட்ட செயலாளர் புவனேஸ் சமூக விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் பேசினர். கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் , ராஜஸ்தான், ஜார்கண்ட், புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக அரசும் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உட்பட 4 கோரிக்கைகள் கண்டன, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!