18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலடைந்து கிடக்கும் மகளிர் வளாகம், சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை..

பாலடைந்து கிடக்கும் மகளிர் வளாகம், சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை..

எழுதியவர்: Askar February 18, 2020, 9:17 am

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த வேப்பிலை அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஜ்ஜல ஹள்ளி கிராமத்தில்  மகளிர் ஒருங்கிணைந்த  சுகாதார வளாகம் உள்ளது.இங்கு குளிக்க, துணி துவைக்க,கழிப்பிடம்,என தனித் தனியாக ஒரே வளாகத்தில் உள்ளது.இந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சரிவர பராமரிக்காமல் நீண்ட நாட்களாக பழுதடைந்து பாழடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இரும்புக் கதவுகள் சில காணாமல் போயுள்ளன.இதனால் இங்கு சுற்று வட்டார கிராமப் பகுதியிலுள்ள பெண்கள் பெரும் வெளி உபாதைகள் அவஸ்த்தைக்கு ஆளாகி வருகின்றனர்.கிராம நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை மீண்டும் புதுப்பித்து பயன்பாட்டுக்குத் தருமாறு பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!