தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஒண்ணப்ப கவுண்டன ஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாக்கனூர் கிராமத்தில் சலவையாளர் தெருவில் மாதக் கணக்கில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. மலை போல் தேங்கியுள்ள குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.துர்நாற்றம் வீசும் குப்பையால் அருகில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்க முடிவதில்லை, வழிநெடுகிலும் கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளது.குப்பைக் கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளதால் குடிநீர் பம்பு முக்கால் பாகம் மறைந்துள்ளது. சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி பொதுமக்களுக்கு குடிநீர் குழாயை பயன்படுத்த வழிவகை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




You must be logged in to post a comment.