18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “தமிழ் யாருக்கு சொந்தம்” கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் வினியோகம்..

“தமிழ் யாருக்கு சொந்தம்” கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2020, 10:08 pm

சமீபத்தில் கீழை பதிப்பகம் சார்பாக கீழக்கரை வடக்குத் தெருவை சார்ந்த செய்யது ஆப்தீன் எழுதிய “தமிழ் யாருக்கு சொந்தம்” என்ற புத்தகம் இன்றைய நவீன உலகத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக வெளியிடப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியின் நிர்வாகத்தின் ஒப்புதலோடும், ஆதரவுடனும் இன்று (17/02/2020) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இப்புத்தகம் வழங்கப்பட்டது.

இப்புத்தகத்தை முகைதீனியா பள்ளியின் கல்விக்குழு துணைத்தலைவர் MMS முகைதீன் இபுராஹிம் வழங்கினார். இந்நிகழ்வின் போது பள்ளியின் முதல்வர் சேகு சகுபான் பாதுஷா, பொருளார் சேகு பசீர் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் கீழை பதிப்பகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!