18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உங்களால் முடியும் 2020

உங்களால் முடியும் 2020

எழுதியவர்: mohan February 17, 2020, 6:10 pm

மண்டபம் யூனியன் கும்பரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித் தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பில் உங்களால் முடியும் 2020 என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கும்பரம் கிராம தலைவர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவி துளசி தேவி ,தலைமை ஆசிரியர் காதர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய சத்ரிய நாடார் சங்க பொதுச்செயலாளர் காந்திராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் நல தலைவர் துரைராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர் தாரணி மகேந்திரன் வரவேற்று பேசினார்.

கடுக்காய்வலசை தலைமையாசிரியர் கணேசபாண்டியன் , இரட்டையூரணி தலைமையாசிரியர் புகழேந்தி, இருமேனி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கலைராஜூ, கும்பரம் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சேவியர் ராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ,சாதனை படைத்த மாணவர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நேசம் அறக்கட்டளை சார்பாக மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நேசம்அறக்கட்டளை நிறுவனர் கோட்டைச்சாமி, கார்த்திக், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர், அகில இந்திய சத்ரிய நாடார் சங்க நிர்வாகிகள், கும்பரம் கிராம நிர்வாகிகள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கடுக்காய்வலசை, கும்பரம், வாணியாங்குளம், சிறுவயல், இரட்டையூரணி ,மேதலோடை, தாமரைக்குளம் ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் தங்கராஜ் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!