17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கண்டன மற்றும் முற்றுகை ஆர்ப்பாட்டம்…

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கண்டன மற்றும் முற்றுகை ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2020, 5:23 pm

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கண்டன மற்றும் முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று (17/02/2020) தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மக்கள் திரளாக  கீழக்கரை இந்து பஜாரில் இருந்து V.A.Oவரை திரண்டிருந்தனர்.

கடந்த 15:02:2020 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA, NRC, NPR, க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில்  பொதுமக்கள் மற்றும் அனைத்து இயக்கங்கள் இனைந்து வண்ணார்பேட்டை சம்பவத்தைக் கண்டித்து சாலைமறியல் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து இன்று 17:02:20202. மாலை 4:00 அளவில்  கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆரிப் தலைமயில் சுமார் 1000 க்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தாலுகா அலுவலம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறை மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினார்கள். கீழக்கரை டிஎஸ்பி,  கீழக்கரை ஆய்வாளர் மற்றும்  சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில்  பாதுகாப்பு பணியில்  ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

சிறப்பு செய்தியாளர்:- SKV சுஹைபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!