தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி , அஞ்சல் வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார். அஞ்சலக அலுவலர்கள் கௌதம்,இருளாண்டி,கதிரேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மாணவர்கள் ஜோயல் ரொனால்ட் ,ஐயப்பன்,நதியா,ஜனஸ்ரீ , ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்
ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி
எழுதியவர்: mohan February 17, 2020, 5:33 pm




You must be logged in to post a comment.