சீனா குணாக்சி மாநிலம் குனான்டாங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பான் ஜியாங் சூன்,48. இவர் கடந்த ஜனவரி 21 அன்று கொல்கத்தா வந்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா பயணம் சென்ற அவர், நேற்று (பிப்.16) இரவு ராமேஸ்வரம் வந்தார். ராமநாதசுவாமி கோயில் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
இது குறித்து விடுதி நிர்வாகி நகர் போலீசில் தகவல் தெரிவித்தார்.இதன்படி சீன பயணிக்கு சுகாதார துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். கரோனா வைரஸ் பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் படி அவரை சீனாவிற்கு திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்







You must be logged in to post a comment.