18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீண்.அதிகாரிகள் எங்கே. பொதுமக்கள் ஆவேசம்.

உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீண்.அதிகாரிகள் எங்கே. பொதுமக்கள் ஆவேசம்.

எழுதியவர்: mohan February 17, 2020, 4:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டுகளை கொண்டுள்ளது. ஆனால் உசிலம்பட்டியில் கோடை காலம் நெருங்குவதற்கு முன்பே குடிநீர் தட்டுபாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே கருக்கட்டான்பட்டி செல்லும் சாலையில் கடந்த ஒரு வாரமாக கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் 2000த்திற்கும் மேற்பட்ட லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கிறது. மேலும் குடிநீர் வீணாகி செல்வதால் கருக்கட்டான்பட்டி உள்ளிட்ட தெருக்களுக்கு குறைவான தண்ணீர் செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடனே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயின் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நகராட்சி பகுதிகளில் மட்டும் பல பகுதிகளில் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவது வழக்கமாக தொடர்கிறது . எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கோடை காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புக்களை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!