17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே மணல் திருடிய மினி லாரி பறிமுதல்

நிலக்கோட்டை அருகே மணல் திருடிய மினி லாரி பறிமுதல்

எழுதியவர்: mohan February 17, 2020, 12:23 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகள் புகார் செய்தவண்ணம் இருந்தனர்.  இந்நிலையில் நேற்று இரவு கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில்  வைகை ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கணபதியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவர் ஒரு மினி லாரியில் அனுமதியின்றி மணலை வைகை ஆற்றில் திருட்டுத்தனமாக அள்ளி வந்தது தெரியவந்தது.     உடனடியாக வண்டி மடக்கிப்பிடித்து போது திருமலைசாமி தப்பி ஓடி விட்டார். மினி லாரியை பறிமுதல் செய்து நிலக்கோட்டை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருமலைசாமி வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!