17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் SDPI அமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரத்தில் SDPI அமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2020, 7:17 pm

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி இராமநாதபுரம் நகர் எஸ்டிபிஐ., சார்பில் சந்தை திடல் பகுதியில் இன்று (16/02/2020) மாலை நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் சுலைமான் தலைமை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய  கவுன்சிலர் பைரோஸ்கான்,  மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் ஷரீப் ,ஊடக தொடர்பாளர் வஹாப், தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் பீர் முகைதீன்  வரவேற்றார்.

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மன்சூர் , எஸ்டிபிஐ.,  நகர் தலைவர்  அப்துல் ஜமீல் ஆகியோர் கண்டன உரை பேசினார். நகர் செயலாளர்  சகுபர் சாதிக் நன்றி கூறினார்.  சாயல்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில எஸ்டிபிஐ,, மாநில பொதுச்செயல் அப்துல் ஹமீது, தேவிபட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட இமாம் தஷன், பரமக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் எஸ்டிபிஐ., மாவட்ட பேச்சாளர் பஷீர் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழக அரசும் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!