18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தில் சிக்கிய நபர்களை விரைந்து சென்று முதலுதவி அளித்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்.

விபத்தில் சிக்கிய நபர்களை விரைந்து சென்று முதலுதவி அளித்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்.

எழுதியவர்: mohan February 16, 2020, 1:37 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மூலக்கரை ரவுண்டானா அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நிலைகுலைந்த  ஹெல்மெட் அணிந்திருந்ததால் கையில் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்  கணேஷ்குமார்  சம்பவ இடத்துக்கு விரைந்தார் .காயம் பட்டவர்களுக்கு அவரே முதலுதவி செய்து 108க்கு தகவல் கொடுத்தார்.   108 வாகனம் காயமடைந்தவர்களை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் கூறுகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவதால் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும்போது தலைக்காயம் ஏற்படாமல் கை கால்களில் மட்டும் அடிபட்டால் உயிர் சேதம் தவிர்க்கப்படும்.  அதுபோன்ற விபத்து தான் தற்போதும் ஏற்பட்டது உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!