மதுரை மாவட்டம் பழங்காநத்தம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பாக நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து சமுதாய மாணவ மாணவிகளும் அதிக அளவில் மதிப்பெண் பெற ஆண்டு தோறும் தட்சிணா மூர்த்தி ஹோமம் மற்றும் ஹைகிரிவர் ஹோமம் நடைபெற்றது .இவ்விழாவில் வேத மங்கலம் மூலங்கள் யாகங்கள் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான உபகரணங்கள் பேனா பென்சில் ரப்பர் உள்ளிட்டவர்கள் பூஜிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.