17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வினை நோய், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வினை நோய், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2020, 7:56 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வினை நோய், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாலை 03.00 மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால்  வழிநடத்தினார்.

முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் அரசு மருத்துவமனை, இராமநாதபுரம் V.A.முகம்மது நய்னார், ICTC ஆலோசகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் மாணவிகளிடம் எய்ட்ஸ் நோய் தோற்றத்தையும், பரவும் விதத்தையும் எடுத்துரைத்தார்.மேலும் தகாத உறவு, சுத்தரிக்கப்படாத ஊசிகள், இரத்தம், நோய் அறிகுறியுள்ள பெண்ணின் தாய் பால் போன்றவற்றாலும், தன் சுத்தம் இல்லாமையாலும் நோய் வரும் என்று கூறி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை யூத் ரெட் கிராஸ் குழு சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!