17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் கால்நடை மருத்துவர் மதுபோதையில் 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.!

பாலக்கோட்டில் கால்நடை மருத்துவர் மதுபோதையில் 11 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.!

எழுதியவர்: Askar February 15, 2020, 7:54 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கல்கூடல்பட்டியில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது . மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். காலையில் எட்டு மணிக்கு பணிக்கு வராமல் 12  மணிக்கு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இன்று காலை 11 மணி ஆகியும் கால்நடை மருத்துவா் செந்தில் மருத்துவமனைக்கு வராத காரணத்தால் மாடு,ஆடு, கோழி, நாய்,போன்ற விலங்குகளை சிகிச்சைக்காக கொண்டுவந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக காதத்திருந்தனா். மருத்துவர் வராத காரணத்தால் ஒரு கோழி மற்றும் ஒரு நாய் பரிதாபமாக சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் தெரிந்த மருத்துவர் செந்தில் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது மதுபோதையில் அவர் இருந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து மதுபோதையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்துவரும் கால்நடை மருத்துவர் செந்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கால்நடைகள் கோழி போன்ற விலங்குகளுக்கு நோய் ஏற்பட்டு வதால் அதிக அளவு கால்நடை மருத்துவமனையை நாடி வருகின்றனர்.இன்று சனிக்கிழமை கோழிக்கு தடுப்பூசி போடும் நாள் என்பதால் ஏராளமானோர் கோழிகளை தடுப்பூசி போட கொண்டு வந்திருந்தனர். மருத்துவர் 3 மணி நேரம் தாமதமாக மருத்துவமனைக்கு  வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மருத்துவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாலக்கோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!