17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் உதவி மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார்.!

பாலக்கோட்டில் மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் உதவி மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார்.!

எழுதியவர்: Askar February 15, 2020, 7:35 pm
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் மகளிர் மற்றும் பள்ளி சிறுமிகளுக்கு பல்வேறு பாலியல் தொல்லைகள். பெண்களின் குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் தர சுமார் 50 கீ.மீட்டர் தூரம் உள்ள பெண்னாகரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தமிழக அரசு பெண்களுக்கென முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திர மங்கலம் , காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, இண்டூர் ஆகிய 7 காவல் நிலைத்தை ஒன்றினைத்து பாலக்கோட்டை தலைமையிடமாக கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.இதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, டிஐஜி பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் ,ஏடிஎஸ்பி சுஜாதா, டிஎஸ்பி சீனிவாசன்,மேகலா, அனைத்துகாவல் ஆய்வாளர்கள் விஸ்வநாதன்,கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மகளிர் காவல் நிலையம் திறந்தற்க்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!