மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் ரோடு நேரு நகர் அரவிந்த் மிரோ பள்ளி செல்லும் வழியில் வரிசையாக சுமார் ஆறு இடங்களில் குப்பைகளை எரிப்பதால் கடும் புகை கிளம்பி வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது தொடர்கதையாகவே ஆகிக்கொண்டு இருக்கிறது. இதை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் அலட்சிய போக்குடனே செயல்பட்டு வருகிறார்கள். இது சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமாக உள்ளது இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.