புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரி தாவரவியல் ஆய்வுத்துரையில் 14-02-2020 அன்று குளிர்மை அரங்கத்தில் “காகித நுண்ணோக்கியின் முக்கியத்துவமும் அதனைக் கையாளும் முறைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த பயிற்சி பட்டறையில் தாவரவியல் துறைத்தலைவர் முனைவர். மீனாட்சி சுந்தரம் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் A.R.பொன் பெரியசாமி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் மற்றும் செயலர் திரு. பொன். இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக முனைவர் P.பிரகாஷ் (துறைத்தலைவர்,தொழில்நுட்ப அறிவியல்,வெல்ஸ் கல்வி நிறுவனம்) அவர்கள் கலந்து கொண்டு காகித நுண்ணோக்கியின் முக்கியத்துவமும் அதனைக் கையாளும் முறைகளும் குறித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் எடுத்துரைத்தார். இந்த பயிற்சி பட்டறையில் இளம் அறிவியல்,முது அறிவியல்,தாவரவியல் துறையைச் சார்ந்த 120 மாணவர்கள் முழு ஈடுபாட்டோடு கலந்து கொண்டு தனது ஐயங்களைக் கேட்டு தெளிந்தனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மூன்றாம் ஆண்டு இளம் அறிவியல்(தாவரவியல்) மாணவி செல்வி.தேவி நன்றியுரை வழங்கினார்.
செய்தி:இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.







You must be logged in to post a comment.