17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நண்பனை கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை

நண்பனை கொலை செய்த நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறை

எழுதியவர்: mohan February 15, 2020, 5:55 pm

குமுளி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராஜேஷ் கண்ணன் என்பவரை கொலை செய்ததாக இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் சந்தோஷ், வெனிஸ், ஜான் ஆகிய மூன்று நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்.இவ்வழக்கு 14.02.2020-ம் தேதியன்று தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில்நீதிபதி திரு.அப்துல்காதர்.BABL., அவர்கள் போலீசார் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் மூன்று நபர்களும் குற்றவாளி என்பதை உறுதி செய்து ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வி, பாராட்டுகளை தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!