17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சாின் வருகைக்காக காலை முதல் பட்டினியுடன் காத்துக்கிடந்த மக்கள்

அமைச்சாின் வருகைக்காக காலை முதல் பட்டினியுடன் காத்துக்கிடந்த மக்கள்

எழுதியவர்: mohan February 15, 2020, 5:48 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானமும் நடைபெறுவதாக கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை காலை 9 மணிக்கே ஊராட்சி ஒன்றிய அலவலகத்திற்கு அதிமுகவினர் அழைத்து வந்துள்ளனர். இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைப்பார் என கூறினர். ஆனால் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் காலதாமதமாக வந்ததுடன், சிறப்புரையாற்றினார். அதன்பின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஆரம்பித்தார். இந்நிலையில் அதிமுக வினர் காலை முதல் மதியம் வரை பசி, பட்டினியுடன் சாப்பாடு வழங்காமல் பொதுமக்களை அலைகளிக்க செய்த அதிமுகவினர் மீது பொதுமக்கள் கொந்தளித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!