17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்பான பட்ஜெட்.. ஆா்.பி.உதயக்குமாா் பாராட்டு

சிறப்பான பட்ஜெட்.. ஆா்.பி.உதயக்குமாா் பாராட்டு

எழுதியவர்: mohan February 15, 2020, 5:19 pm

பொருளாதார நிபுணர்கள் கையாள்வது போல நிதிப்பற்றாக்குறையை சமாளித்து சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேட்டியில் கூறினார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைதொடர்ந்து அங்கு மாபெரும் அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.

அதனைதொடர்ந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்;; ஆர்பி உதயக்குமார் வழங்கினார்.மேலும் பேரையூர் ரோட்டில் உள்ள டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்களையும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்திந்த அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பொருளாதார நிபுணர்கள் கையாள்வது போல நிதிப்பற்றாக்குறையை சமாளித்து சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு என கூறினார். இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, கோட்டாட்சியர் சௌந்தர்யா, வட்டாட்சியர் செந்தாமரை மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, பாண்டியம்மாள், செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் ராஜா, நகரசெயலாளர் பூமாராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!