18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் களத்தில் துணையாக நிற்போம்.!

ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் களத்தில் துணையாக நிற்போம்.!

எழுதியவர்: Askar February 15, 2020, 2:45 pm

இது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய முஸ்லிம் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.

ஜனநாயக நாட்டில் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையைக் கொண்டு அமைதி வழியில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீது ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது தேவையில்லாமல் தேன்கூட்டில் கை வைப்பது போல் ஆகிவிடும்.

இப்போராட்டங்களில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அது போன்றே, இப்பிரச்னையில் ஜனநாயக வழியில், அமைதியாக போராடும் இஸ்லாமியப் பெருமக்கள் உள்ளிட்டோருக்கு எப்போதும் களத்தில் துணையாக நிற்போம் என்று அவர் உறுதி தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!