இலங்கை மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (15/02/2020) காலை மீன்பிடிக்க சென்ற லூவாஸ் அலோசியல, சுகந், சகாய வின்ஸ்ரோ ஆகியோர், தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 மீனவர்களையும், படகுடன் கைது செய்து ராமேஸ்வரம் மெரைன் போலீசில் ஒப்படைத்தனர்.
மீனவர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் போலீசார் மீனவர்களிடம் விசாரித்து வருகின்றனர். இலங்கை கடல் பகுதியில் போதிய மீன்கள் கிடைக்காததால் எல்லை தாண்டி வந்ததாக பிடிபட்ட மீனவர்கள் கூறினர்.




You must be logged in to post a comment.