18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாதுகாப்பு வசதிகளுடன் புனரமைக்கப்படும் காரங்காடு சூழல் சுற்றுலா தளம்..

பாதுகாப்பு வசதிகளுடன் புனரமைக்கப்படும் காரங்காடு சூழல் சுற்றுலா தளம்..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2020, 1:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு சூழல் சுற்றுலா தளமானது பாதுகாப்பு வசதிகளுடன் புனரமைக்கபட்டு வருகிறது. 18.01. 2020ல் நடைபெற்ற விபத்தை தொடர்ந்து பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்தமானிலிருந்து வனத்துறை மூலம் பெரியவர்கள், சிறியவர்கள் என தனித்தனி  உயிர் கவசங்கள் வரவழைக்கப்பட்டன. புதிதாக உயிர்கவச கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிர்கவசம் அணியாத சுற்றுலா பயணிகள் யாரையும் படகில் ஏற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரங்காடு சூழல் சுற்றுலா குழுவினருக்கு பாதுகாப்பு வசதி குறித்து ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர், தொண்டி மெரைன் போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள் சிறப்பான வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர். படகு ஓட்டுநருக்கு 60 மணி நேர சிறப்பு உயிர் காப்பு பயிற்சி வனத்துறை மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளின் கட்டணத்தில் இருந்து சிறிய தொகை உயிர் காப்பீட்டுக்காக ஒதுக்கப்படும். சுற்றுலா தளத்திற்கு தினமும் வந்து ஏமாற்றத்துடன் திரும்புவோருக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் சூழல் சுற்றுலா விரைவில் தொடங்கப்படும் என ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!