17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் போலீசார் தடியடியை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

சென்னையில் போலீசார் தடியடியை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2020, 1:14 pm

சென்னை வண்ணார் பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டோர் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

போலீசாரின் தடியடியை நடவடிக்கையை கண்டித்து ராமநாதபுரம் டி பிளாக் பஸ் நிறுத்தம் அருகே தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ., தவ்ஹீத் ஜமாத் மற்றும் இன்னும் பல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!