சென்னையில் அமைதியாக நடைபெற்ற பெண்கள் போராட்டத்தி்ல் தமிழக காவல்துறை கொடுர தாக்குதல் நடத்தயது தவறு!ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கண்டனம்!
இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக மத்திய பாரதிய ஜனதா கட்சியின் திரு.மோடி அரச இயற்றியுள்ள CAA/NRC/NPR சட்டங்களை கைவிடக்கோரி நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் அதிகளவில் கூடி ஜனநாயக வழியில் அறப்வழி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
இந்த அறவழி போராட்டத்தின் போது தமிழக காவல்துறை கொடுர தாக்குதலை போராடிய பெண்கள் மீதும் போராடும் பெண்களுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டிருந்த ஆண்கள் மீதும் கொடுர தாக்குதலை காட்டுமிராண்டிதனமாக நடத்தியுள்ளது, இதை தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் தலையிட்டு வன்முறையில் ஈடுப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் போல் போராடும் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அந்த பிரச்சனைகளை களைய செய்ய அரசு முன்வர வேண்டும் அதை தவிர்த்து போராடுபவர்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயக நாட்டில் மிகவும் தவறானது. அறவழி போராட்டங்கள் வாயிலாக மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என்பது மக்களின் ஜனநாயக உரிமை. அதை காவல்துறையை கொண்டு ஒடுக்க நினைப்பது கண்டிக்கதக்கது.
இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத சட்டங்களான CAA/ NRC/NPRஐ தங்கள் மாநிலங்களில் நடைமுறை படுத்த மாட்டோம் என்று தங்களது சட்டமன்றத்தில் தீர்மானங்ள் நிறைவேற்றியுள்ளனர் அதை தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்களும் தமிழக சட்ட மன்றத்திலும் CAA/NRC/NPR எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசியல் சாசன சட்டவிதிகளை காப்பாற்றிட வேண்டும் என தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம் S.A.N.வசீகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஆத்மிகட்சி தமிழ்நாடு. 15/2/2020




You must be logged in to post a comment.