17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தருமபுரி மாவட்டம் பாபாபாரப்பட்டி பேரூராட்சியில் காலை மற்றும் மாலை வேலையில் கடும் போக்குவரத்து நெரில்:- சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.!

தருமபுரி மாவட்டம் பாபாபாரப்பட்டி பேரூராட்சியில் காலை மற்றும் மாலை வேலையில் கடும் போக்குவரத்து நெரில்:- சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.!

எழுதியவர்: Askar February 15, 2020, 9:28 am
தருமபுரி மாவட்டம் பாபாபாரப்பட்டி பேரூராட்சியில் காலை மற்றும் மாலை வேலையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டு வருகின்றது. பாப்பாரப்பட்டி பஸ்நிலையத்திற்கு   தருமபுரி, பாலக்கோடு, சேலம், பெரியூர்  போன்ற பேருந்துகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி வந்துசெல்கின்றன.இதனால் இந்த பேரூந்து நிலையத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  வந்து செல்கின்றனர்  . இதில் காலை மற்றும் மாலை வேலையில் பள்ளி கல்லூரி வாகனங்கள் பேருந்து நிலையத்திற்குள்ளே வருவதும், பஸ்நிலையத்திற்கு எதிரில் வாகனத்தை நிறுத்துவதும், சாலையின் நடுவே நிறுத்தி மாணவ, மாணவிகளை இறக்குவதால் பின்நோக்கி வரும் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அணி வகுத்து நிற்கும் சூழல் உருவாகுகின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுவது மட்டுமின்றி அவரச தேவைக்கு ஆம்புலன் செல்ல முடியாத நிலையில் உள்ளது. புதிய பேருந்து நிலையம்,  மூன்று ரோடு , பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலமுறை நெடுஞ்சாலை நிர்வாகத்திற்கு தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கததால் பாபாபாரப்பட்டி பேரூராட்சி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் நெடுஞ்சாலை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!