18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடாவடி வசூலில் ஈடுபடும் ரயில்வே வாகன காப்பகம் தனியார் ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அடாவடி வசூலில் ஈடுபடும் ரயில்வே வாகன காப்பகம் தனியார் ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எழுதியவர்: mohan February 14, 2020, 12:17 pm

மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு .மேற்கு என இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது. இதில்  இருசக்கர வாகனங்களுக்கு தனியாகவும் கார்களுக்கு தனியாகவும் வாகன காப்பகங்கள் உள்ளது .இவர்கள் கார்களில் வரும் நபர்களிடம் இறக்கிவிட்டு மற்றும் ஏற்ற வரும் வாகனங்களில் கட்டாயமாக வசூலில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக விமான நிலையத்தில் 5 நிமிடம் இறக்கிவிடவும் ஏற்றி விடவும் இலவசமாகவே அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால் இங்கே அப்படி செய்வது இல்லை. கட்டாயமாக 20 ரூபாய் ஏற்ற வந்தால் இறக்க வந்தாலும் கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி கட்டாய வசூல்  ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தனியார் ஒப்பந்த ஒப்பந்ததாரரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் அதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!