17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் பணியில் உயிரிழந்த காவல் சார்பு ஆய்வாளர் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்.

விருதுநகரில் பணியில் உயிரிழந்த காவல் சார்பு ஆய்வாளர் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்.

எழுதியவர்: mohan February 12, 2020, 7:39 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜா மகன் கார்த்திக். இவர் காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.  தற்போது விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வளராக பணியாற்றி வந்த நிலையில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில் கார்த்திக்கின் உடல் அவரது  சொந்த ஊரான குப்பணம் பட்டிக்கு எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் காா்த்திக் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்  21 குண்டு முழங்க கார்த்திக் உடல் அரசு மரியாதையுடன்தகனம் செய்தனர்.காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி வந்த காவலரின் உயிரிழப்பு, குப்பணம்பட்டி கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு அரசியல் பிரமுகா்கள் நண்பா்கள் உடன் பணியாற்றுவோா் சோகத்துடன் காணப்பட்டனா்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!