17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு

ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு

எழுதியவர்: mohan February 12, 2020, 5:14 pm

மதுரை மாநகர் விராட்டிபத்து பென்னர் காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி  ராஜலெட்சுமி என்பவர் ஆட்டோவில் விராட்டிபத்துவில் ஏறி காளவாசலில் இறங்கும்போது தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். அவர் இறங்கிய பிறகு தான் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்மீரான் என்பவருக்கு ஆட்டோவில் ஒரு கைப்பை இருப்பது தெரியவந்தது. எனவே ராஜலெட்சுமியை பல மணி நேரம் அப்பகுதியில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் நேற்று கரிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  சங்கர்கண்ணன்டம் ஆட்டோ ஓட்டுநர் கைப்பையை ஒப்படைத்துள்ளார். காவல் ஆய்வாளர் கைப்பை வாங்கி பார்த்த போது அதில் 4 ½ பவுன் தங்க நகையும், ரூ.23500/- பணமும் இருந்ததை அறிந்தார். இன்று ஆட்டோ ஓட்டுநர் ஷேக்மீரான் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், முன்னிலையில் ராஜலெட்சுமியிடம் கைப்பையை ஒப்படைத்தார். காவல் ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு பணவெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!