மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு மந்தை காளியம்மன் திருக்கோவிலில் நூதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் கணபதிஹோம புஜையுடன் துவங்கி முதல்யாகசாலை பூஜை, இரண்டாம்கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபூஜைகள் நடைபெற்றது. அதனெதொடர்ந்து மங்கள இசை முழங்க கோவில் அர்ச்சகர் ரமேஷ் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து அங்குள்ள 9நவக்கிரக சிலைகளுக்கும் புனித நீர்ஊற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மந்தை காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியில் உள்ள மந்தைகாளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகம்
எழுதியவர்: mohan February 12, 2020, 4:52 pm




You must be logged in to post a comment.