17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடு அருகே கள்ளக்காதலனுடன் வசித்துவந்த 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு

கொடைரோடு அருகே கள்ளக்காதலனுடன் வசித்துவந்த 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு

எழுதியவர்: mohan February 12, 2020, 3:52 pm

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த சங்கிலிமுருகன் (35) – மகேஸ்வரி (30) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி – 7 ஆண்டுகள் ஆகும் . இவர்களுக்கு நித்ரா (6) ரக்க்ஷிதா (1) என்ற 2 பச்சிளம் குழந்தைகள் உள்ள நிலையில் மகேஸ்வரிக்கு கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35) மிச்சர் கடை மாஸ்டர் என்பவர் சங்கிலி முருகன் வீட்டில் வாடகைக்கு தங்கி வேலைக்கு சென்று வந்த போது மகேஸ்வரியுடன் தவறான பழக்கம் ஏற்பட்டு கடந்த 4- மாதத்திற்கு முன்பு மகேஸ்வரி தன் கணவனை பிரிந்து கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியில் ராமச்சந்திரனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில்  காலை ராமச்சந்திரனுடன் மகேஸ்வரிக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மகேஸ்வரி வீட்டில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மகேஸ்வரி வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். .உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடலைக் கைப்பற்றிய அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் இன்ஸ்பெக்டர் லாவன்யா உடற்கூறு ஆய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,.மேலும் மகேஸ்வரியுடன் வசித்து வந்த கள்ளக்காதலன் ராமச்சந்திரன் தலைமறைவானதை அடுத்து காவல்துறையினர் ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!