இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறுசேமிப்பு திட்ட மகளிர் முகவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பரிசு வழங்கி பாராட்டினார்.தமிழக அரசு சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிறுசேமிப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,
மாவட்ட, நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள பொதுமக்களிடத்தில், சிறுசேமிப்பு முகவர்கள் மூலம் அஞ்சலக சிறுசேமிப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டில் சிறுசேமிப்புத் திட்ட செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட 21 மகளிர் முகவர்கள் மற்றும் நிலை முகவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.வீரப்பன் அவர்கள் உடனிருந்தார்.
ராமநாதபுரத்தில் சிறுசேமிப்பு திட்ட முகவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
எழுதியவர்: mohan February 12, 2020, 1:12 pm




You must be logged in to post a comment.