17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் பேரூராட்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு ஆய்வு

மண்டபம் பேரூராட்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு ஆய்வு

எழுதியவர்: mohan February 12, 2020, 1:03 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு சோதனையில் பேரூராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். நகரில் உள்ள டீ ஸ்டால்கள், பலகார கடைகள், பேக்கரிகள், மளிகை, ஜவுளி கடைகளில் ஆய்வு மேற் நடத்தினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், காகித குவளைகள், காகிதப் பைகள் மற்றும் உறைகளை பயன்படுத்த அறிவுறுத்தினர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் 2019 ஜனவரி 1 முதல் பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதையடுத்து, ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தல் படி, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரா.ராஜா ஆலோசனை படி செயல் அலுவலர் செ.மாலதி வழிகாட்டுதல்படி பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் மு. ஜாகீர் உசேன், சுகாதார பரப்புரையாளர்கள் ஜெ.கார்த்திகா, ரா.கோகிலா, குடிநீர் பராமரிப்பு பணியாளர் சோணைமுத்து, பூங்கா தற்காலிக பணியாளர் ரா. குருராஜன் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பயன்பாட்டிற்கு வைத்திருந்த 45 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல், மளிகை கடை ஒன்றிற்கு ரூ,500 அபராதம் விதித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!