17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 வருடம் சிறைதண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 வருடம் சிறைதண்டனை

எழுதியவர்: mohan February 12, 2020, 9:27 am

ஆண்டிபட்டி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மதுரைவீரன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் POCSO ACT- ன் கீழ் வழக்கு பதிவு செய்து மதுரைவீரன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 11.02.2020-ம் தேதி தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில் நீதிபதி .கீதா,ML., மதுரைவீரன் என்பவரை குற்றவாளி எனக் கூறி  366 IPC-ன் படி 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருட சிறை தண்டனை, 6 of POCSO ACT-ன் படி 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 வருட சிறை தண்டனை எனவும் இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறி தீர்ப்பளித்தார்.மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வி, பாராட்டுகளை தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!