கன்னியாகுமரி மாவட்டம் காரோடை சேர்ந்த ரெஞ்சிதம்(72) என்பவர் தனது தோழியின் வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நிதின்ராஜ்(17) என்பவர் ரெஞ்சிதம் அவர்கள் கழுத்தில் கிடந்த 2 1/2 சவரன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பினார்.உடனே ரெஞ்சிதம் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த அருமனை பொறுப்பு காவல் ஆய்வாளர் ராஜ சுந்தர் குற்றவாளி நிதின்ராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.