18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 10, 2020, 6:06 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி 10/02/2020 அன்று மாலை 03.00 மணியளவில் நடைப்பெற்றது.

கல்லூரி முதல்வர் Dr.A.R. நாதிரா பானு கமால்  பரவிக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை எனவே விழிப்புணர்வு மூலமாகவே தடுத்துக் கொள்ளலாம் என்றும், மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் அனைவரிடமும் சென்று அடையும் என்ற காரணத்தினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது என்று மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர் Dr.P. முனீஸ்வரி, உதவி அறுவை சிகிச்சை நிபுணர், அரசு சுகாதார மையம் சித்தார்கோட்டை. அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும் முறையையும், அதன் அறிகுறியையும், சுத்தமாக இருத்தல் அவசியம் என்றும் கை கழுவும் முறையையும் எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவிகளிடம் செய்முறை விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வை IQAC குழு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!