திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தயன்கோட்டையை சேர்ந்தவர் முத்து முகமது. இவர் சென்னையில் அலுவலகம் வைத்திருப்பதாகவும் பல பேர்களை வெளிநாடு அனுப்பி
உள்ளதாகவும் கூறி ஆன்லைன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி படித்த பட்டதாரிகளை நம்ப செய்து அவர்களிடமிருந்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் வெளிநாடு செல்வதற்காக முத்து முகமது என்பவரிடம்ஜெயபிரகாஷ் – திண்டுக்கல், அருண் – கன்னியாகுமரி, ஜாக்சன் – கன்னியாகுமரி, பரக்கத்துல்லாஹ் – சித்தையன் கோட்டை, பூபேஷ் – கோயம்புத்தூர் ஆகியோரும் தங்களுக்கு லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 30 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டதாகவும், பல வருடங்களாகியும் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை எனவும் குடும்ப சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டோர் தங்களிடமிருந்து நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் பணம் கொடுத்ததாகவும் பணம் கிடைக்காவிடில் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 30 லட்சம் மோசடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டோர் மனு
எழுதியவர்: mohan February 10, 2020, 6:05 pm




You must be logged in to post a comment.