17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் அருகில் பெட்ரோல், டீசல் பதுக்கி வைத்த தனியார் குடோனில் தீ விபத்து

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் அருகில் பெட்ரோல், டீசல் பதுக்கி வைத்த தனியார் குடோனில் தீ விபத்து

எழுதியவர்: mohan February 10, 2020, 2:21 pm

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தில் அருகே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பதுக்கி வைத்திருந்த தகர செட்டால் அமைப்பட்டு இருந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர்.அப்போது குடோனில் இருந்த கரடிகள் கிராமத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் உடல் கருகி பலியானார்.

தொடர்ந்து குடோனில் இருந்த ஆசை,உதயகுமார், கார்த்திக், ஆறுமுகம் ஆகிய 4 பேர் தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை பதுக்கி வைத்திருந்த வைத்திருந்தவர்கள் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து தீ விபத்தினால் திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் மூலம் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!