17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வருகிற 24ம்தேதி திருநெல்வேலியில் அமமுக சார்பில் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வருகிற 24ம்தேதி திருநெல்வேலியில் அமமுக சார்பில் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர்: mohan February 10, 2020, 2:16 pm

திருநெல்வேலியில் வருகிற 24ம்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அமமுக சார்பில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநில மாநாட்டில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில் மாநாடு குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாவட்டசெயலாளர் அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பது குறித்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் உசிலம்பட்டி நகரசெயலாளர் குனசேகரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டியன் மற்றும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!